காரைதீவில் முதியோர்களுக்கான சிகிச்சை முகாம்.

நூருள் ஹுதா உமர் 

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும், முதியோருக்கான தேசிய செயலகமும் இணைந்து நிபுணத்துவம் மிக்க வைத்தியர்களைக் கொண்டு   சிரேஷ்ட பிரஜைகளுக்கான மருத்துவ முகாம் இன்று (21) மாவடிப்பள்ளி அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினை காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்கள்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள். அத்துடன் இந்நிகழ்வில் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திரு. குறுஸ்  குணரத்தினம், சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர் எம்.எம்.நளிபா , மாவடிப்பள்ளி  கிழக்கு, மேற்கைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களும், பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள். 

இதன் போது தொற்றா நோய்களுக்கான ருத்துவ பரிசோதனை, கண், காது,மூக்கு தொண்டை தொடர்பான மருத்துவ பரிசோதனை, வாய்ச் சுகாதாரம் மற்றும் பல் தொடர்பான மருத்துவ பரிசோதனை, ஆயுர்வேத மருத்துவப் பரிசோதனைகள் போன்ற பிரிவுகளில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, கல்முனை அஸ்ரப் நினைவு வைத்தியசாலை,  காரைதீவு பிரதேச வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களை கொண்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.