ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைது
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புபட்ட முறைப்பாடுகள் மற்றும் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் இது வரையில் 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவர்களுள் பிரதேச சபை உறுப்பனர்கள் சிலரும் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று (17) ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 851 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.