புலமைப்பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகள் பெற்ற கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் சசிகாந்தன்

(சி.சசிகுமார் )

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் சசிகாந்தன் டேனுவர்சன் 197 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இக்கல்லூரியில் இருந்து 155 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 67 மாணவர்கள் 151 வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். 144 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்


இதே வேளை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர்கல்லூரியில் 77 மாணவர்களும், புனித மரியாள் கல்லூரியில் 28 மாணவர்களும், உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் 29 மாணவர்களும்,  புனித சூசையப்பர் கல்லூரியில் 11 மாணவர்களும், தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் 02 மாணவர்களும் வெட்டு; புள்ளிகளுக்கு 151 மேல் பெற்றுள்ளனர்.

அழகுகலை நிபுநரான சசிகாந்தன்  தனது மகனின் சாதனை பற்றி தெரிவிக்கையில், பாடசாலையில் கற்றுக்கொடுக்கப்படும் விடயங்களுக்கு மேலாக மனைவி சுஹாவே உற்சாகப்படுத்தி மேலதிகமாக விளக்கங்களை வழங்கி வைத்தார். இவ்வெற்றி அவருக்கு கிடைத்த வெற்றியே. நான் மேலதிக வகுப்புகளுக்கோ,  வினாப்பத்திர வகுப்புகளுக்கோ மகனை அனுப்பவில்லை. அவரை கஸ்டப்படுத்த விரும்பவில்லை. அவர் நன்றாகவே சகல பரீ;ட்சைகளிலும் புள்ளிகள் எடுத்து வந்துள்ளார். வலய கல்வி அலுவலகத்தால் நடத்தப்படும் பரீட்சைகளில் கூட 195 புள்ளிகள் எடுத்துள்ளார்.  அவர் 195 புள்ளிகள் எடுப்பார் என நம்பியிருந்தேன். ஞாயிற்று கிழமைகளில் விஸ்வநாத சுவாமி சிவன் ஆலய அறநெறி வகுப்புகளுக்கு தவறாது அனுப்பி விடுவேன். அவரை ஏற்றி இறக்குவதே என் பணி. இச்சாதi மiவியையே சாரும். மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று அவர் எங்களுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்.

டேனுவர்சனின் தாயார் திருமதி சசிகாந்தன் சுஹாசினி தெரிவிக்கையில் .மகன் 8.00 மணிக்கு நித்திரை வருகிறது என்று சொன்னாலும் அவரை தூங்க வைத்துவிடுவேன், ஓய்வை அவர் விரும்பினால் அதற்கு தடை விதி;ப்பதில்லை. காலையில் 5.30 மணிக்கே தூக்கத்தால் எழுவார்.  அரை மணி நேரம்  படிப்பார். படிப்பதை ஆர்வத்துடன் கவனமாக படித்து விடுவார். இதுவே அவரது சாதனைக்கு காரணமாகும் என்றார் அடக்கத்துடன். 

எமக்கு பெருமைக்கு வழிசமைத்த ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் கற்பித்த திருமதி திலகராணி கலைச்செல்வம்  (கவிதா) ஆசிரியருக்கும் நன்றிக்கடன் பெற்றுள்ளோம்.