195 புள்ளிகள் பெற்று அம்பாறையில் முதலிடம் , கிழக்கு மாகாணத்தில் இரண்டாமிடம் பெற்ற சக்தி வித்தியாலய மாணவி


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் கல்வி வலய  கோரைக்களப்பு சக்தி வித்தியாலய மாணவி உதயகுமார் மகிஷாயினி 195 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் . 
அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் , கிழக்கு மாகாணத்தில் இரண்டாமிடம் .

விநாயகபுரத்தை சேர்ந்த உதயகுமார் தவமலர் தம்பதியினரின் மகளாவார்.

பாடசாலை அதிபர் இந்திரன் தங்கராஜா தெரிவிக்கையில் .

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து 58 மாணவர்கள் தோற்றி 49 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். வெட்டுப் புள்ளிக்கு மேல் 7 மாணவர்கள் புள்ளிகள் பெற்றுள்ளனர். இதில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற உதயகுமார் மகிஷாயினி மாணவி  எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.  பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு கற்பித்த அனைத்து ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவிக்கின்றேன் என கூறினார் .