வெபர் விளையாட்டரங்கில் மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி


மட்டக்களப்பில்; மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்த மாவட்ட விளையாட்டு அபிவிருத்திசபை   நடவடிக்கை எடுத்து வருகின்றது இதன் ஒரு அம்சமாக  மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்திசபையின் தலைவருமான மாணிக்கம் உதயகுமார் எடுத்துகொண்ட முயற்சியின் பயனாக  மகளீர் உதைபந்தாட்ட உதவித்திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்தோர் சர்வதேச அமைப்பின் அணுசரனையில் அரசாங்க அதிபர் உதயகுமார் வேண்டுகோளின் பேரில் இன்று  17 ந்திகதி மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றும் காலை 8.30 மணி அளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது . 

இதன் இறுதிப்போட்டிகள் பிற்பகல் 2.30 மணிக்கும்; நடத்தப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் இம்மாவட்டத்திலுள்ள முன்னணி மகளீர் கால்பந்தாட்ட கழக அணிகள் பங்குபற்றுகின்றன