முன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீரங்கா உள்ளிட்ட 06 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட விசாரணை பிரிவினருக்கு, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே அவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.