கிழக்கு மாகாண சபையின் குடிமக்கள் வரவு செலவுத் திட்டம் வெளியிட்டு வைபவம்



(கதிரவன்)
கிழக்கு மாகாண சபையின் குடிமக்கள் வரவு செலவுத் திட்டம்  புதன்கிழமை 2019.11.06 மதியம் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சிறுவர் தூதுகர் நிதியத்தின் அனுசரணையுடன் இது வெளியிட்டு வைக்கப்பட்டது. 

திருகோணமலை ஏகாம்பரம் வீதியில் அமைந்துள்ள ஜேகப் விடுதியில் இந்நிகழ்வு இடம் பெற்றது. கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்த்தன இதன் முதல் பிரதியினை நிதி ஆணைக்குழுவின் தலைவரும், யுனிசெப் நிறுவத்தின் பிரதிநிதியுமான உதித்த ஹரிலால் பளிக்காரவிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மக்கள் நிறுவனங்களின் பிரதிகள் என பலரும் கலந்து கொண்டனர். பொது மக்கள் கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை இலகுவாக அறிந்து கொள்வதற்கு வசதியாக இது வெளியட்ட வைக்கப்பட்டது. 

இததை தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்ட இணையத்தளமும் தொடக்கி வைக்கப்பட்டது. பொது மக்கள் இதனையும் வெளிப்படைத்தன்மையுடன் பார்வையிட முடியும்.