சட்டவிரோதமான முறையில் 25 கிலோ மரை இறைச்சியை கொண்டு சென்ற இருவர் கைது

(எப்.முபாரக்)
திருகோணமலை ஜயந்திபுர காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 25 கிலோ மரை இறைச்சியை கொண்டு சென்ற இருவரை இன்று(1) காலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜயந்தி புர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜயந்திபுர பகுதியிருந்து கந்தளாய் பகுதிக்கு கொண்டு காட்டு வழியாக சென்ற போதே 25 கிலோ மரை  இறைச்சியுடன் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.