மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 904 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .



மட்டக்களப்பு மாவட்டத்தில் 904 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் எ .எஸ் .எம் .சியாத் தெரிவித்தார் .

மேலும் மாவாட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப்பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக 904 குடும்பங்களின் 30239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் நான்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

இதில் 136 குடும்பங்கள் முகாம்களிலும் 481 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்

இதேவேளை மாவட்டத்தல் சில பகுதிகளுக்கான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார் .

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான போக்குவரத்துக்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள நிதியின் இராணுவத்தின் உதவியுடன் படகுகள் மூலம் போக்குவரத்து சேவைகளை வழங்குவதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவாதாகவும் தெரிவித்தார் .

இதேவேளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் 24 மணித்தியால சேவையில் ஈடுபட்டு வருவதோடு வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள நாவற்குடா கிழக்கு பூநொச்சி முனை ,காத்தான்குடி பகுதிகளில் முமாம்களில் தங்கியுள்ளவர்களை , மற்றும்  மட்டக்களப்பு கிரான் புலி பாயிந்தான் கல் பகுதி மக்களுக்கான படகு சேவையினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட உதவி பணிப்பாளர் எ .எஸ் .எம் .சியாத் தெரிவித்தார் தெரிவித்தார் .