BATTINEWS இனால் சங்காரவேல் பவுண்டேசன் நிதியில் திருக்கோவில் வலய மாணவர்களுக்கு 3000 அப்பியாச கொப்பிகள் வழங்கி வைப்பு

(சுதன்,துதி )
திருக்கோவில் கல்வி வலய   மாணவர்களுக்கு வற்றி நியூஸ் ஊடாக  சங்காரவேல் பவுண்டேசன்  அமைப்பினால் அப்பியாச கொப்பிகள் வழங்கி  வைக்கும் நிகழ்வு வற்றிநியூஸ் ஸ்தாபகர்  DR.ஆர்.சயனொளிபவன் தலைமையில் நேற்று தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது .

திருக்கோவில் வலய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன .

இந் நிகழ்வில்  மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் , CARE  இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் தங்கவடிவேல் , மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ் , பட்டிருப்பு வலய கோட்ட கல்வி பணிப்பாளர் அருள்ராஜா , சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் பொருளாளர் ரீ.குபேந்திரன் , மக்கள் வங்கி பிரதி முகாமையாளர் சுதாகரன் , கிராம சேவை உத்தியோகத்தர் இரா.ராஜரட்ணம் , தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய முன்னாள் அதிபர் ஜெயந்தன் , தற்போதைய அதிபர் திருமதி.பாலகுமாரி தம்பிப்பிள்ளை ,  வற்றிநியூஸ் ஸ்தாபகர்  DR.ஆர்.சயனொளிபவன் மற்றும் குழுவினர் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளை வழங்கி வைத்தனர் .

லண்டன் சிவன் கோவில் பொருளாளர்  சுகுமார்  சங்காரவேல் அவர்கள்  வற்றிநியூஸ் ஸ்தாபகர் DR.ஆர்.சயனொளிபவன் ஊடாக  வழங்கிய 200,000 ரூபா  நிதியில்  இவ்  அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன .

புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு பத்து லட்சம் ரூபா நிதியில் வெள்ள நிவாரண பணிகள் வற்றிநியுஸினால் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

BATTINEWS  ஏனைய வெள்ள நிவாரண பணிகள் 
1.விநாயகபுரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு 
2. சின்னத்தோட்டம் பகுதியில்  நுளம்புவலை , உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு  
3. பொத்துவிலில்  நிவாரணம் வழங்கிவைப்பு 
4.ஆலையடிவேம்பு மக்களுக்கு நிவாரணம்.வழங்கி வைப்பு
5.சிற்றூளியர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு