London - Henshou Isshinryu Karate Academy வெள்ள நிவாரண பணி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிற்றூளியர்களுக்கு இன்று உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 வற்றிநியூஸ் ஊடாக லண்டனில் இயங்கிவரும் (Henshou Isshinryu Karate Academy) ஹென்ஷோ இஸ்ரியு  ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவர்களினால் வழங்கப்பட்ட 123,500 ரூபா நிதியுதவியின் மூலம் இப் பொருட்களை இன்று அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் முன்னிலையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சினி மற்றும் ஆர்.சயனொளிபவன், டி.அருள்ராஜ், எஸ்.பிரேமானந்தன், நி.குபேந்திரன், ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வானது இன்று (17.12.2019) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 3மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் அரசாங்கத்தினால் அரச சேவையில் கடமையாற்றுகின்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கபட்ட அரச ஊழியர்களுக்கு எவ்விதமான நிவாரண பொருட்களும் கொடுக்க முடியாத நிலையில் இவ் அமைப்புடன்  கோரி இருந்தமைக்கு அமைவாக ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு இருந்தது அந்த வகையிலே இந்த நிறுவனத்திற்கு அரசாங்க அதிபர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அப் பொருட்களை வழங்கி வைத்தார்.