வாகன விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கிரான் விஷ்ணு ஆலய வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மு.யோகநாதன் வயது (67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வழக்கம் போல் கோரவெளி பகுதியிலுள்ள தமது வயலுக்கு இரவு காவல் கடமைக்கு செல்லும் போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கிரானில் இருந்து கோராவெளி பிரதான வீதியால் துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார் .