கொழும்பு தேஸ்டன் கல்லூரியின் 70ஆவது நிறைவாண்டு விழாவில் பிரதமர் பங்கேற்பு!


கொழும்பு தேஸ்டன் கல்லூரியின் 70ஆவது நிறைவாண்டை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். மாணவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று தெரிவித்த பிரதமர் . ஏனைய பாடசாலைகளிலிருந்து விலக்கப்படும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பாடசாலையாக கொழும்பு தேஸ்டன் கல்லூரி ஒரு காலத்தில் இருந்ததாகவும் கூறினார்.

தேஸ்டன் கல்லூரி கலை, விளையாட்டு உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. கல்லூரியின் வளர்ச்சிக்காக பழைய மாணவர்கள் ஆற்றும் பணிகளையும் பிரதமர் இதன்போது பாராட்டிப் பேசினார்.