மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய உணவுகளுக்கான சிற்றூண்டி நிலையம் திறப்பு விழா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய உணவுகளுக்கான சிற்றூண்டி நிலையம் திறப்பு விழா இன்று மாவட்டச் செயலக முன்றலில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மு.ப 11.00 மணியளவில் இன்று இடம்பெற்றது.

மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள், சேவை நாடிகள,; உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலாச்சார பூர்வமாக எமது மண்ணின் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கான சிற்றூண்டி நிலையம் இன்று மாவட்ட செயலக வளாகத்தினுள் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, கணக்காளர்களான கே.பிரேம்குமார், எம்.பசீர், உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி இந்திரா மோகன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.