சம்மாந்துறைபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச மட்ட கொபிட் -19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது, ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்ட வேளையில் மக்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது சன நெரிசலை குறைத்து நடமாடும் சந்தை ஊடாக மக்களின் காலடியில் வழங்குவது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகளை கிராம உத்தியோகத்தர் ஊடாக வழங்குதல், சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டி அற்ற கடன், சமுர்த்தியால் அத்தியவதிய உணவு பொதிகள் வழங்குதல், சஹாய விலையில் சமுர்தியினால் விசேட உணவு அட்டை வழங்குதல், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல், மக்களின் சமய கடமைகள், அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி, கே.டி.எஸ்.ஜெயலத், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை, வர்த்தக சங்க பிரதிநிதிகள், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வர்த்தகர்களும் பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

01.ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையில் நோயாளர்களுக்கு வைத்திய சேவை மற்றும் பாமசி சேவையை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்படும் தனியர் மருந்துகளின் வைத்தியரின் சிட்டைகளை சமர்பிப்பதன் மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் அத்துடன் நடமாடும் விற்பனை வண்டியில் பொது மக்களுக்கு தேவையான அத்தியவசிய சகல பொருட்களும் பொலிஸாரின் முன் அனுமதியுடன் கட்டுப்பாட்டு விலைகளில் விற்பனை செய்யப்படும்.

02. சமூர்த்தி நல உதவிபெறும் குடும்பங்களுக்கு 10,000.00 ரூபாய் பெறுமதியான வட்டி அறவிடக் கடன் சமூர்த்தி வங்கி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்படும் ஒரு வாரத்துக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் சமுர்த்தி நல உதவி பெறும் குடும்பங்கள், நல உதவிபெறத் தகுதியான குடும்பங்களுக்கும் சமுர்த்தி சங்கங்களுடாக வினியோகிக்கப்படும். (இச்சேவையினை கொடுப்பனவு செலுத்தி பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்)

03. தபால் நிலையங்களுடாக வழங்கப்படும் முதியோர், பொது சகாய நிதி ஆகிய கொடுப்பனவுகள் கிராமசேவை உத்தியோகத்தர் அலுவலகத்தில் வழங்கப்படும்.

04. நாளாந்த கூலி வருமான பெறுகின்ற அல்லது குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்குகின்ற போது சமூக அமைப்புகள், பிரதேச செயலக மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைமைப்படுத்தும் செயலணியினை தொடர்பு கொண்டு வினியோகிக்வேண்டும்.

05. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளையில் பொது மக்களுக்கு தேவையான பல சரக்கு பொருட்கள், மரக்கறி வகைகள், பிற பொருட்கள் கட்டுப்பாட்டு விலைகளில் வீரமுனை சந்தி(ஆன்டிட சந்தி) விளினியடிச் சந்தி, வண்டுச் சந்தி(கொச்சிக்காதூளர் சந்தி), பழைய பொதுச் சந்தை, கைகாட்டிச் சந்தி, சலாம் பள்ளிவாசல் சந்தி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படும்.

06. மக்கள் கூடுகின்ற இடங்களில் தொற்று நீக்கிகள் விசிறும் பணியானது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் வேளைகளில் (இன்று தொடக்கம்) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் செயற்படுத்தப்படும்.

07. விவசாய நடவடிக்குப் பயன்படுத்தும் உழவு இயந்திரங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தும் நாட்களில் காலை 5.00 மணி தொடக்கம் காலை 8.00 மணி வரை பொலிஸாரின் மேற்பார்வையில் எரி பொருள் நிலையங்களில் வினியோகிக்கப்படும்.

08. சகல பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை தொழுகையானது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுகின்ற பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

09. சம்மாந்துறை பிரதேச சபை ஊடாக நாளை வியாழக்கிழமை நடமாடும் விற்பனை நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் இடங்களில் முகக் கவசம் (மாஸ்க்) இலவசமாக பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும்.

10. பொது மக்கள் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளையில் பொது இடங்களில் ஓழுங்கு படுத்துவதற்காக சமூக நல அமைப்புகள் பங்களிப்பு பெறப்படும்.

11. ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள உள்ள வேளைகளில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வீதிகளில் விளையாடுவதற்கோ, இன்னும் பிற தேவைக்ளுக்கோ அனுப்ப வேண்டாம். இதனை மீறிகின்ற பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

12. முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு இரு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக வினியோகிக்கப்படும்.

சம்மாந்துறை பிரதேச மட்ட கொபிட் -19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் நேற்றைய கூட்;டத்தில் உள்ளிட்ட தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் கூட்டத்தில் மேற்கொள்ளப்ப்ட தீர்மானங்கள்

(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச மட்ட கொபிட் -19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது, ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்ட வேளையில் மக்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது சன நெரிசலை குறைத்து நடமாடும் சந்தை ஊடாக மக்களின் காலடியில் வழங்குவது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகளை கிராம உத்தியோகத்தர் ஊடாக வழங்குதல், சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டி அற்ற கடன், சமுர்த்தியால் அத்தியவதிய உணவு பொதிகள் வழங்குதல், சஹாய விலையில் சமுர்தியினால் விசேட உணவு அட்டை வழங்குதல், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல், மக்களின் சமய கடமைகள், அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி, கே.டி.எஸ்.ஜெயலத், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை, வர்த்தக சங்க பிரதிநிதிகள், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வர்த்தகர்களும் பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

01.ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையில் நோயாளர்களுக்கு வைத்திய சேவை மற்றும் பாமசி சேவையை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்படும் தனியர் மருந்துகளின் வைத்தியரின் சிட்டைகளை சமர்பிப்பதன் மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் அத்துடன் நடமாடும் விற்பனை வண்டியில் பொது மக்களுக்கு தேவையான அத்தியவசிய சகல பொருட்களும் பொலிஸாரின் முன் அனுமதியுடன் கட்டுப்பாட்டு விலைகளில் விற்பனை செய்யப்படும்.

02. சமூர்த்தி நல உதவிபெறும் குடும்பங்களுக்கு 10,000.00 ரூபாய் பெறுமதியான வட்டி அறவிடக் கடன் சமூர்த்தி வங்கி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்படும் ஒரு வாரத்துக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் சமுர்த்தி நல உதவி பெறும் குடும்பங்கள், நல உதவிபெறத் தகுதியான குடும்பங்களுக்கும் சமுர்த்தி சங்கங்களுடாக வினியோகிக்கப்படும். (இச்சேவையினை கொடுப்பனவு செலுத்தி பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்)

03. தபால் நிலையங்களுடாக வழங்கப்படும் முதியோர், பொது சகாய நிதி ஆகிய கொடுப்பனவுகள் கிராமசேவை உத்தியோகத்தர் அலுவலகத்தில் வழங்கப்படும்.

04. நாளாந்த கூலி வருமான பெறுகின்ற அல்லது குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்குகின்ற போது சமூக அமைப்புகள், பிரதேச செயலக மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைமைப்படுத்தும் செயலணியினை தொடர்பு கொண்டு வினியோகிக்வேண்டும்.

05. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளையில் பொது மக்களுக்கு தேவையான பல சரக்கு பொருட்கள், மரக்கறி வகைகள், பிற பொருட்கள் கட்டுப்பாட்டு விலைகளில் வீரமுனை சந்தி(ஆன்டிட சந்தி) விளினியடிச் சந்தி, வண்டுச் சந்தி(கொச்சிக்காதூளர் சந்தி), பழைய பொதுச் சந்தை, கைகாட்டிச் சந்தி, சலாம் பள்ளிவாசல் சந்தி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படும்.

06. மக்கள் கூடுகின்ற இடங்களில் தொற்று நீக்கிகள் விசிறும் பணியானது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் வேளைகளில் (இன்று தொடக்கம்) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் செயற்படுத்தப்படும்.

07. விவசாய நடவடிக்குப் பயன்படுத்தும் உழவு இயந்திரங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தும் நாட்களில் காலை 5.00 மணி தொடக்கம் காலை 8.00 மணி வரை பொலிஸாரின் மேற்பார்வையில் எரி பொருள் நிலையங்களில் வினியோகிக்கப்படும்.

08. சகல பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை தொழுகையானது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுகின்ற பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

09. சம்மாந்துறை பிரதேச சபை ஊடாக நாளை வியாழக்கிழமை நடமாடும் விற்பனை நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் இடங்களில் முகக் கவசம் (மாஸ்க்) இலவசமாக பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும்.

10. பொது மக்கள் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளையில் பொது இடங்களில் ஓழுங்கு படுத்துவதற்காக சமூக நல அமைப்புகள் பங்களிப்பு பெறப்படும்.

11. ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள உள்ள வேளைகளில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வீதிகளில் விளையாடுவதற்கோ, இன்னும் பிற தேவைக்ளுக்கோ அனுப்ப வேண்டாம். இதனை மீறிகின்ற பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

12. முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு இரு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக வினியோகிக்கப்படும்.

சம்மாந்துறை பிரதேச மட்ட கொபிட் -19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான செயலணியின் நேற்றைய கூட்;டத்தில் உள்ளிட்ட தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்கது.