கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்து !

கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நபர்களை 
 இரணுவத்தினர், மாத்தறைக்கு ஏற்றிச் சென்ற பஸ்ஸின் மீது பின்னால் வந்த மற்றுமொரு பஸ் மோதியுள்ளது.

இதன் போது இராணுவத்தினர் இருவரும், சுற்றுலா பஸ்சின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.