கிருமிநாசினிகளை காற்றில் தெளிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - விமானப் படை

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கிருமிநாசினிகளை வான்வெளியில் காற்றில் தெளிக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லையென தெரிவித்துள்ள இலங்கை விமானப்படை அவ்வாறு எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லையென தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த  இலங்கை விமானப் படையினர் ஹெலிகொப்டர்கள் மூலம் கிருமிநாசினிகளை காற்றில் தெளிக்கவுள்ளது என்று சமூக ஊடகங்களில் பரவிய போலியான செய்தி வெளிவந்த நிலையிலேயே இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விமானப் படையினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.