கந்தளாயில் கொரோனா சந்தேக நபர்களைக்கொண்ட ஐந்து குடும்பங்களுக்கு கொரொனா தொற்றின் தாக்கம் தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும்

(எப்.முபாரக்) 
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்று சந்தேக நபர்களைக்கொண்ட ஐந்து குடும்பங்களுக்கு கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கந்தளாய், ரஜஎல,மற்றும் ஜயந்திபுர போன்ற பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐந்து குடும்ப உறுப்பினர்களுக்கே இதன் போது இன்று(25) கொரொனா வைரசின் தாக்கம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,சிவில் பாதுகாப்பு படை பிரிவினர் போன்றோர் கொரொனா வைரசிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற தகவல்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தெளிவுபடுத்தப்பட்டதோடு,கொரொனாவிலிருந்து பாதுகாப்பு பெறுவோம் என்ற ஸ்டிக்கர்களும் வீட்டில் ஒட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.