நடமாடும் வியாபாரிகளுக்கு போக்குவரத்து அனுமதி கல்முனை வடக்கு பிரதேச செயலாளரினால் வழங்கி வைப்பு

(பாறுக் ஷிஹான்)
அம்பாரை மாவட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நடமாடும் வியாபாரிகளுக்கான அனுமதிப்பத்திரம் வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜினால் வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டில் வேகமாக பரவி வரும் பொருளாதாரத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மக்களின் ஒன்றுகூடல் தவிர்ப்பதற்காகவும் இலகுவில் மக்களிடம் பொருட்கள் சென்றடையும் நோக்கத்தைக் கொண்ட இத்திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அன்றாட மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை பொலிஸ் நிலையம் கல்முனை பிரதேச செயலாளர் இணைந்து செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் போது வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளை மக்களது வீடுகளுக்கு நேரடியாக சென்றடையக் கூடிய வகையில் நடமாடும் வியாபாரிகள் மூலமாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் சென்றடைய இந்த திட்டம் வழிவகுக்கும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது குறித்த வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்க கூடாது எனவும் பொருட்களின் விலைப்பட்டியல் மற்றும் விற்பனைக்கு இல்லாத பொருட்களின் பெயர் பட்டியலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் குறித்த வியாபாரிகள் பொது சுகாதார உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பின் அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தபடுவர். உரத்த வியாபாரிகள் அனைவரும் பொது நலன் கருதி சேவையாகவே இதனை கருத வேண்டும் மாறாக மக்களிடம் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய கூடாது அவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கான அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்படும்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள 150க்கும் மேற்பட்ட நபர்கள் கல்முனை பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் ஆகவே அவர்கள் நடமாடும் வியாபாரத்தில் விடுபடுவது குறித்தும் நாங்கள் தற்காலிக தடையை மேற்கொண்டிருக்கின்றோம். நடமாடும் வியாபாரிகள் அனைவரும் மக்கள் ஒன்று சேர்வதை தவிர்த்து அவர்களிடம் ஒன்று சேர வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டிய கடமைப்பாடு உங்களுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டார்.