கொவிட் 19 விதிமுறைக்கமைய சுகாதார முறைமையினை கடைப்பிடிக்காது மேலதிக வகுப்புகளை இரசியமாக நடத்திய ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்துபாடசாலைகளுக்கும் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தலவாக்கலை பகுதியில் இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயின்ற மாணவர்கள் 14 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வகுப்பறையும் பொது சுகாதார பரிசோகர்களினால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக்க சேபால தெரிவித்தார்.