சஹ்ரான் பற்றி வந்த மற்றுமொரு தகவல்

(ஜே.எப்.காமிலா பேகம்)
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக காத்தான்குடியில் நடந்த மோட்டார் சைக்கிளில் குண்டுவெடிப்பு முன்முயற்சி குறித்தும் அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் தெரியப்படுத்தியதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முக்கிய அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் நேற்று முன்தினம் சாட்சியமளிக்கையில், அவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் ஏப்ரல் 17ஆம் திகதியில் காத்தான்குடியில் இப்படியான முயற்சியொன்று, இடம்பெற்றிருப்பது குறித்து காணி உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தொலைந்துபோன அடையாள அட்டை ஒன்றைப் பெற்று மோட்டார் சைக்கிள் கொள்வனவு முதற்கொண்டு இடம்பெற்றிருக்கும், சகல தகவல்களையும் பொலிஸ்மா அதிபரிடம் பாரப்படுத்தியிருந்ததாகவும், அந்த அதிகாரி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.