லண்டன் பழுகாமப் பரம்பரை ஒன்றியம் (PAPA) அமைப்பின் இரண்டாம் கட்ட நிவாரண உதவி
உலகெங்கிலும் பரவி வருகின்ற நோய்த்தொற்றின் காரணமாக மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அல்லலுறும் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு பல அமைப்பினரும் பல உதவித்திட்டங்களை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அம்மணி அவர்கள் லண்டனில் வாழ்ந்து வரும் பழுகாமப் பரம்பரை ஒன்றியம் (PAPA) அமைப்பின் தலைவர் திரு.காசுபதி பெஞ்சமின் பாலா அவர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் திரு.காசுபதி பெஞ்சமின் பாலா மற்றும் ஸ்பெயின் நாட்டில் வசித்துவரும் அவரது மகள் செல்வி.ஷீலா பாலா ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் 3 ஆம் குறிச்சியை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு பழுகாமப் பரம்பரை ஒன்றியம் (PAPA) அமைப்பின் பழுகாமக்கிளை நிருவாக சபை உறுப்பினர்களினால் உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.