12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள 'ககன' எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.