சமகால அரசியல் தொடர்பில் வாழைச்சேனையில் கலந்துரையாடல் கூட்டம்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் எதிர் நோக்கும் சவால்களும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் தியாவட்டுவான் கிராம சேவகர் பிரிவில் இடம் பெற்ற நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விளக்கமளித்தார்.

விழையாட்டுக்கழகத்தினால் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.