இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு தீர்மானம்


இலங்கை – பாகிஸ்தான் உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் இலங்கை மாணவர்களுக்கு 5 வருடகாலத்திற்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கு பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு முன்வந்துள்ளது

இதனூடாக ஊடாக இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் பொறியியல் விஞ்ஞானம், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்கமைய மாணவர்களுக்கான வகுப்புக்கட்டணம், தங்குமிட கட்டணம், படநெறிக்கான கட்டணம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மொஹமட் ஷாட் கட்டாக் ஆகியோருக்கிடையில் அலரிமாளிகையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் பரஸ்பர தகவல் பரிமாற்றத்தின் ஊடாக இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையில் காணப்படும் தீவிரவாதத் தடுப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்தல் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.