திருமணமான தமிழ் பெண்ணொருவரை பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொலை செய்ய முயற்சி; பிறைந்துரைச்சேனையை சேர்ந்த நபர் கைது

(வாழைச்சேனை நிருபர் ரூத் ருத்ரா)
வாகரையை சேர்ந்த திருமணமான தமிழ் யுவதி ஒருவரை பலாத்காரத்துக்கு உட்படுத்த முயற்சித்து குறித்த பெண்ணை கொலை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் உள்ள பொது மலசலகூடம்(பெண்கள்) ஒன்றினுள் குறித்த பெண் சென்ற போது அதனை அவதானித்து அவரை பின் தொடர்ந்த நபர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார், குறித்த பெண் அதற்கு சம்மதிக்காததை தொடர்ந்து குறித்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

குறித்த பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அயலவர்கள்; அப்பெண்ணை காப்பாற்றியதோடு, கொலை செய்ய முயற்சித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படடைத்துள்ளனர்.

கொலை செய்ய முயற்சித்தவர் பிறைந்துரைச்சேனையை சேர்ந்தவர் எனவும் போதை மாத்திரை பயன்படுத்துபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.