மின்கட்டண உயர்வு: அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சியான செய்தி!

(ஜே.எப்.காமிலா பேகம்)
மின்கட்டணம் அதிகரித்தமை குறித்து இன்று கூடிய அமைச்சரவையில், விசேட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் அதிகரித்த மின்கட்டணத்தில் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளர் திரு ஜனகன் விநாயகமூர்த்தியும் இவ்விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் விசனம் தெரிவித்திருந்ததுடன்," கொரானா காலப்பகுதியில் மக்கள் வெளியே செல்ல தடை விதித்திருந்ததால், மின்பாவனை அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்று, இதன்பலனாக வீடுகளில் மின்பாவனை அதிகரிப்பு ஏற்பட்டது.

இருப்பினும் கட்டணம் அறவீட்டுக்கு மானி வாசிப்பாபாளர் மூன்று மாதங்கள் வராமல், ஒரேடியாக கட்டணத்தை மொத்தமாக போடப்பட்டதால், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

ஆகவே அரசாங்கம் மின்சார கட்டண அறவீட்டு விடயத்தில், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் " என்றும் அழுத்தமாக கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.