அரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் - சஜித்

தற்போதைய அரசாங்கம் மக்களைப் பற்றி சிந்தித்து, உடனடியாகத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கொ​ரோனா தொற்றின் இரண்டாவது ​அலை ​தொடர்பில் அனைத்து தகவல்களையும் வழங்குவது அரசாங்கம் மாத்திரமே எனத் தெரிவித்துள்ள அவர், இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து, பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ​தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தலைமையிலான குழுவினர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று இது தேர்தல் நடத்துவதற்கு சிறந்த காலம் இல்லை என தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.