ரிஷாட் பதூர்தீனுக்கு குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக இன்று அழைப்பு


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.

கடந்த 27ஆம் திகதி வவுனியாவில் உள்ள குற்றபுலனாய்வு திணைக்களத்தின் கிளையில் ஆஜராகிய அவரிடம் 5 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் விசாரணை செய்யப்பட்டிருந்தது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய கடந்த 27ஆம் திகதி ரிஷாட்டிடம் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தின் வவுனியா இரட்டைப் பெரியகுளம் உப பிரிவில், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ரிஷாட் பதியூதீன் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், அவர் வருகைதராத காரணத்தால், நீதிமன்ற உத்தரவை பெற, திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.