தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது

ராஜாங்கனை மற்றும் லங்காபுர உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

லங்காபுர பகுதியில் விஷேட திட்டத்துடன் தேர்தலை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படாது எனவும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய வாக்களிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.