வாகநேரி விபத்தில் சிறுவன் பலி


(மண்டூர் ஷமி)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகநேரி பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் (16) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஆலய உற்சவமொன்றுக்கு சென்று வீடு திரும்பும் வேளையில் அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் குறித்த சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்