பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு நெருக்கமானவர் ஒருவர் கைது!

பாதாள உலகக் குழு உறுப்பினரான குடு அஞ்சுவிற்கு நெருக்கமானவர் ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குலானை பிரதேசத்தை சேர்ந்த சித்தும் நிலங்க பீரிஸ் என்ற அசங்க என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான குடு அஞ்சுவிற்கு நெருக்கமானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மீகொடை தஹம் மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ஒன்றும் மற்றும் அதற்கான தோட்டாக்கள் 10 ம் மற்றும் மேலும் 10 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றவியல் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.