(எம்.ஜி.ஏ நாஸர்)
அரசியலமைப்பின் 13 ஆவது சரத்து வலுப்படுத்தப்பட்டு மாகாண சபைகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகளை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பிரதேசத்தில் சுமார் முப்பது கோடி ரூபா மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீளஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்ட மாநாடு நேற்று மாலை நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்.ஜி.ஏ நாஸர் அறிவித்துள்ளார்.
நகர சபை முதல்வர் ஐ.அப்துல் வாசித் தலைமையில் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர், பொறியியல், கணக்காளர், உள்ளுராட்சி மன்றம் கட்டட திணைக்களம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களின் துறைசார் உயரதிகாரிகள் மற்றும் நகர சபையின் முன்னாள் முதல்வர் எம்.ஐஎம். தஸ்லிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த மாகாண சபை அதிகாரத்தின்போது 2016 ஆம் ஆண்டில் ஏறாவூரில் பத்துக்கோடி 93 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் பொதுச்சந்தை மற்றும் 9 கோடி 70 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் கலாசார மண்டபம் ஆகிய கட்டடங்களுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பூரணப்படுத்தப்படும் நிலையில் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன. இதையடுத்து ஏற்பட்ட அரசியல் ரீதியிலான நெருக்குதல் காரணமாக பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவ்வேலைத்திட்டங்களை மீளஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கூறினார்.