முகக்கவசம் அணியாத இருவருக்கு நேர்ந்த நிலை; மக்களே எச்சரிக்கை!

முகக்கவசம் அணியாமல் விடுதியில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுபிட்டி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் முகக்கவசம் அணியாமல் இருந்த இளைஞர் மற்றும் யுவதியை பொலிஸார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவும் விதத்தில் செயற்பட்டார்கள் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த இருவரும் தாங்கள் கொரோனா தொற்று பரவும் விதத்தில் செயற்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து குறித்த வழக்கு ஜனவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், குறித்த இருவரும் மதிய உணவை உண்பதற்காக முகக்கவசம் அணியாமல் இருந்ததாக அவர்களது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இருவரையும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்