தனிமைப்படுத்தல் ஊரடங்கு- அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை பிரிவுகளில் இன்று மாலை 6 மணிதொடக்கம் மறு அறிவித்தல்வரை !

(வி.சுகிர்தகுமார்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

இத்தகவலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியேறுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மத்திய சந்தை பிரதேசத்தில் மேலும் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்