வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி விபத்து- வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
முச்சக்கரவண்டியில் வேகமாக பயணித்தவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று(20) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை சந்தை பகுதியில் வைத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.