வர்த்தக நிலையங்களை திறத்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு

(ரூத் ருத்ரா)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 26 நாட்க்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதனை அடுத்து கோறளைப்பற்று வாழைச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறத்தல், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மக்களின் சுகாதார பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு இன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று முதல் பொதுமக்களின் நன்மை கருதி சுகாதார விதிமுறைகளுக்கமைய மருந்தகம், சில்லறைக் கடை, மரக்கறிக் கடை, கோழிக்கடை என்பனவற்றை திறத்தல்.

புடவைக் கடை, இரும்புக் கடை என்பன தற்போது திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

வாழைச்சேனை மீன் பிடி துறைமுகம் திறப்பது தொடர்பாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானித்தல்.

நுன்கடன் அறவீட்டினை கிராம மட்ட குழுக்களால் கண்கானித்து அறவீட்டினை பிற்போடல்.

கொரோனா தொற்றினை தவீர்ப்பதற்கு பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகளை கிராம் தோறும் 5 பேர் கொண்ட குழுக்களை அமைத்து கண்கானித்தல்.

சமூர்த்தி பயனாளிகளின் நன்மை கருதி டிசம்பர் மாத சமூர்த்தி கடன் அறவீட்டினை அறவிடாமல் தவீர்த்தல்.

பொருடக்களின் விற்பனை விலைகள் அதிகரித்து காணப்படுவதனால் விலையினை கட்டுப்பாட்டு விலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தல். என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்போது கோறளைப்பற்று தவிசாளர் திருமதி சோபாஜெயரஞ்சித், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் மற்றும் பிரதேசத்தின் ஆர்வலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.