பொலிஸாருக்கு முச்சக்கர வண்டிகள் வாங்க நிதி ஒதுக்கீடு!
நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பிரதேசங்களில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் முச்சக்கர வண்டிகளை வாங்க பொலிஸ் திணைக்களத்திற்கு ரூ.2500 மில்லியனை பிரதமர் ஒதுக்கியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசேட பொலிஸ் வாகனங்களை நிறுத்துவதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் ரோந்துப் பணிகளை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நேற்று பாதீட்டு உரையில் தெரிவித்திருந்தார்.
பொலிஸ் துறையில் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தும் திட்டம் ரணசிங்க பிரேமதாச ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.