மட்டக்களப்பு பிள்ளையாரடியில் விபத்து


மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இரண்டு லொரி நேருக்கு நேர் மோதி விபத்தில் காயமடைந்த லொறி சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஒரு சாரதி தப்பி ஓடியதாக தெரியவருகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .