மட்டக்களப்பு நகரில் பட்டப்பகலில் 66 பவுன் நகை திருட்டு !


பட்டப்பகலில் மட்டக்களப்பு நகரில் 66 அரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்;டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் புளியந்தீவு புனித அந்தோனியார் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் வேளையில் அடையாளம் காண முடியாத நபர் ஒருவரினால் 66 அரை பவுன் தங்க நகைகளை திருடப்பட்டு சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில் கடந்த வியாழக்கிழமை 19 ஆம் திகதி பிற்பகல் வேளையில் புனித அந்தோனியார் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டாவது அறையில் கட்டில் பகுதியில் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 66 அரை பவுன் தங்க நகையினை அடையாளம் காண முடியாத நபர் ஒருவரினால் வீட்டின் ஜன்னல் பகுதி ஊடாக தடியினை பயன்படுத்தி திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகளை திருடி சென்றுள்ள குறித்த நபரை அடையாளம் காண முடியாத நிலையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் 0714290126 ,  065 222 5357, 065 222 4442, 077 254 7527 என்ற தொலை பேசி இலக்கத்தின் ஊடாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்