
இந்தியாவிலிருந்து ஈரான் நோக்கிப் பயணித்தபோது இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்திலிருந்து திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
கடந்த 14-ஆம் திகதி திருகோணமலை வெளித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இக்கப்பல், சனிக்கிழமை (18) உள் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு தற்போது அங்கு தரித்து நிற்கின்றது. இக்கப்பலில் பயணித்த ஈரானியக் கடற்படையினர் ஏற்கனவே விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












