பிள்ளையானை பிணையில் விடமுடியுமாயின் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது?


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை தேவாலயத்தில்  வைத்து  கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு அரை வருடங்கள் சிறையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனை  பிணையில் விடமுடியுமாயின் பல காலமாக சிறையில் வாடும்  உண்மையான தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது?  என தமிழ்த் தேசிய  கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன்   இன்று பாராளமன்றத்தில் கேள்வி எழுப்பினார் . 

இன்று மேலும் உரையாற்றுகையில் 

தமிழ் அரசியல் கைதிகள் 20 , 30 வருடங்கள் என சிறையில் இருக்கின்றனர் ஏன் அவர்களை விடுதலை செய்ய முடியாது ?   சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்வதில் ஏன் அக்கறை ? திருகோணமயில் நடந்த மாணவர் படுகொலைக்கு  என்ன நடந்தது  ? அதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை , கொழும்பில் கடத்தப்பட்ட 11 பேருக்கும் நீதி எங்கே ? இது போல் பாராளமன்ற உறுப்பினர்களாக இருந்த ரவிராஜ் , சிவநேசன் அவர்களுக்கு என்ன நடந்தது ?  என தனது உரையில் குறிப்பிட்டார் 

மேலும் உரையை காணொளியில்  பார்க்கவும்