மட்டக்களப்பில் நேற்று 12 கொரோனா நோயாளர்கள் அடையாளம்! 11 பேர் சுகாதார துறையினைச் சேர்ந்தவர்கள்
மட்டக்களப்பில்  நேற்றையதினம் 12 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 11 பேர் சுகாதார துறையினைச் சேர்ந்தவர்கள் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 387 பேர் கொரோனா தொற்றாளர்களாக இடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர்களில் 132 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் 255 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.