இலங்கையில் கொரோனாவின் பயணம் – இன்றுடன் ஒருவருடம்


இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது.

இலங்கையில் முதன் முதலாக சீன நாட்டிலிருந்து வருகைத் தந்த பெண்ணொருவருக்கு கடந்த வருடம் ஜனவரி 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 19n ஆம் திகதி அவர் முழுமையாக குணமடைந்து தனது நாடு திரும்பினார்.

இதேவேளை, கடந்த வருடம் மார்ச் மாதம் 11ஆம் திகதி, கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர், உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன், கடந்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.