இனங்காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு


கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை,கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இனம் காணப்படாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம்  சனிக்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் நடமாடிவந்நதாகவும் அவரால் கதைக்க,வாசிக்க முடியாநிலையில் இருந்தவரை அப்பிரதேசவாசி ஒருவர் உணவு,உடை அனைத்தும் வழங்கி பராமரித்து வந்ததாகவும் அவருக்கு அவர்களால் வழங்குகின்ற உணவுகளை எடுத்துக்கொண்டு அப்பிரதேசத்தில் உள்ள கைவி;டப்பட்ட ஆலயம் ஒன்றில் வைத்து யாருக்கும் தெரியாமல் உண்டு விட்டு அவரை பாராமரிக்கும் வீட்டுக்கு வந்து போவதாகவும் அவர் இரவு நேரங்களில் அந்த பாளடைந்த ஆலயத்தில்தான் தங்குவதாகவும் இதனால் இவர் எந்த இனத்;தைச் சேர்ந்தவர் இவருடைய உறவினர்கள் யார் என்று கண்டறிய முடியாமல் இருந்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று காலையில் தேனீர் குடித்து விட்டு அயலில் உள்ள வளவிற்குள் வென்றவரை காணவில்லை என்று அங்கு சென்று பார்க்கும் போது மரணமடைந்த நிலையில் காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்:துள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் மரணமானவரின் உறவினர்கள் பதின்நான்கு நாட்களுக்கு முன்னர் முன்வந்து சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்கும் வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேதத்தை வைக்கும் படியும் பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.