(சித்தா)
02.05.1983 இல் ஆசிரியராக மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் முதல் நியமனம் பெற்ற இசையாசிரியர் திருமதி. யோகமேரி -அலோசியஸ் 38 வருட கால அரச சேவையில் இருந்து இன்று (01.04.2021) ஓய்வு பெறுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவுக் கிராமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் மட்/தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியினை மட்/பட்/களுதாவளை மகாவித்தியாலயத்திலும் பெற்றுக் கொண்டார். 1986/1987 ஆம் கல்வியாண்டில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பயின்று, பயிற்றப்பட்ட இசையாசிரியராக மட்/கிரான்குளம் விநாயகர் வித்தியாலத்திற்கு நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து மட்/களுதாவளை மகாவித்தியாலயம், மட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயம், மட்/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம், மட்/ஓந்தாச்சிமடம் சிறி விநாயகர் வித்தியாலயம், மட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம், போன்ற பாடசாலைகளிலும் ஓய்வு பெறும் வரை மட்/தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திலும் கடமையாற்றினார்.
இவர் கிறிஸ்த்தவ சமயத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் பட்டிருப்புக் கல்வி வலயத்தின் சகல நிகழ்வுகளுக்கும் வலுசேர்த்ததுடன் தாம் கற்பித்த காலங்களில் கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம், தேசிய மட்டம் வரை மாணவர்களைத் போட்டி நிகழ்வுகளில் தயார் படுத்தி வெற்றிபெறச் செய்து வலயத்தின் பெருமையினைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) ஆகிய பொதுப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தி 100 வீதச் சித்தியினைப் பெறுவதற்கு வழிகாட்டினார். இவரிடம் பயின்ற மாணவர்கள் பல்கலைக் கழகம் வரை சென்று கற்று தற்போது இசையாசிரியராகக் கடமையாற்றுகின்றமை இவரின் கற்பித்தலுக்கு சிறந்த உதாரணமாகும்.
இவரின் சேவையினைப் பாராட்டி பட்டிருப்பு வலயத்தின் அழகியல் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.க.சுந்தரலிங்கம், இசைக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி.டெ.இராசகுமாரன் மற்றும் இசையாசிரியர்கள் இணைந்து சேவைநலன் பாராட்டினையும் ஒழுங்குசெய்திருந்தனர்.
இவர் சிறந்த விளையாட்டு ஆசிரியரும், சாரண ஆணையாளரும், சிறந்த அதிபருமான திரு.கா.அலோசியஸ் அவர்களின் துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் சிறந்த விளையாட்டு ஆசிரியரும், சாரண ஆணையாளரும், சிறந்த அதிபருமான திரு.கா.அலோசியஸ் அவர்களின் துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.