பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளரின் தாயார் காலமானார்!


(க.விஜயரெத்தினம்)
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளரும் ,துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அமையத்தின் ஆலோசகருமான திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணியின் தாயாரும், துறைநீலாவணையில் பிரசித்தி பெற்ற காலஞ்சென்ற சோதிடர் முருகேசுப்பிள்ளை கதிரவேலுவின் பாரியாருமான திருமதி.வள்ளிப்பிள்ளை கதிரவேலு செவ்வாய்க்கிழமை (6) கல்முனை ஆதார வைத்தியசாலையில் தனது 81 ஆவது வயதில் காலமானார்.

உடல் உபாதையினால் பீடிக்கப்பட்ட வலயக்கல்வி பணிப்பாளரின் தாயார் சுமார் 3 வாரங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை அளிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை சிசிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் இன்று புதன்கிழமை(7)காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு துறைநீலாவணை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் உத்தியோகஸ்தர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,துறைநீலாவணை பொது அமைப்பின் பிரநிதிகள்,ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்கள்.