காத்தான்குடி , மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் 5050mg ஜஸ் போதைப்பொருளுடன் கைது!



மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹெட்டல் ஒன்றில் வைத்து ஜஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரிகள் இருவரை நேற்று  வெள்ளிக்கிழமை மாலை பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மோப்ப நாய் குழுவின் உதவியுடன் 5 ஆயிரத்து 50 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருள், 9 ஆயிரத்து 100 ரூபா பணம் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க வழிகாட்டலில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை பிரதான ரயில்வே திணைக்களத்திற்கு அருகிலுள்ள ஹொட்டல் ஒன்றில் வைத்து ஜஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இருவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது கைதானவர்கள் பிரயாணித்த முச்சக்கரவண்டியை பொலிஸ் போதைப்பொருள் கண்டறியும் மோப்ப நாயின் உதவியுடன் முச்சககரவண்டியை சோதனையிட்டபோது அங்கு சூட்சமாக ஓளித்துவைக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 50 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருள் 9 ஆயிரத்து 100 ரூபா பணம் 4 கையடக்க தொலைபேசி என்பவற்றை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் நீண்டகாலமாக குறித்த போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.