ஓந்தாச்சிமடத்தில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் !

(டிலுக்ஷன்)
மட்டக்களப்பு மாவட்ட ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை  20.06.2021 ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான நிர்வாக சபையின் ஊடாக  1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுமார் 1500 ரூபா பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

வெளிநாடுகளில் வசிக்கும் கிராம உறவுகளின் உதவிகளை பெற்று 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இளைஞர்களின் ஒத்துழைப்புடன் உலர் உணவுப்பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுமார் 1500 ரூபா பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கப்பட்டுள்ளது .