உதய கம்மன்பில அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தல் !
கொரோனாவால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில், எரிபொருட்களின் விலையை நேற்று முன்தினம் (11) அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஏற்படுத்தியிருந்தார் .
இந்த நிலையில் அவருடைய செயற்பாட்டுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை அமைச்சர் ஏற்றுக்கொண்டு, அவரது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.